இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் nandhavanamforum@gmail.com என்ற மின்னஞ்சலுக்குத் தொடர்பு கொள்ளலாம்.

இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் nandhavanamforum@gmail.com என்ற மின்னஞ்சலுக்குத் தொடர்பு கொள்ளலாம்.

Register with us by filling out the form below.




You need to log in to create posts and topics.

தொலைவு 51

சக்தி "சஞ்சுவும் அஞ்சுவும் டிவின்ஸ் இல்லை. இவங்க இரண்டு பேரோட அம்மா, அப்பா இரண்டு பேருமே வேறு வேறு ஆளுங்க" என்றான் உணர்ச்சி இல்லாத குரலில்.

ரவி "புரியல்ல" என்று கூற,

"ஜானகியோட தங்கை தான் அஞ்சலி. என்னோட தங்கை சஞ்சனா" என்றான்.

"ஆனால் நீங்க சஞ்சுவோட பெரியப்பா பையன் தானே?" என காவ்யா புரியாமல் கேட்க,

"ஊரு உலகத்தைப் பொருத்த வரைக்கும் அது தான் எங்க உறவு. அது எங்க இரண்டு பேரோட பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டது.
எங்க தாத்தாவுக்கு இரண்டு பசங்க. ஒருத்தர் அஞ்சுவோட அப்பா மற்றவர் அமுதாவோட அப்பா. தாத்தாவுக்கு ஒரு தம்பி இருந்தாரு. அவருக்கு ஒரு பொண்ணு மட்டும் தான் இருந்தாங்க. அவங்க தான் ஷாலினியோட அம்மா. இவங்க எல்லாரும் ஒரே குடும்பமா தான் இருந்தாங்க. அமுதாவோட அப்பா விவசாயி, அக்ரிகல்சர் படிச்சி இருக்காங்க. அவங்க தான் இந்த வீட்டுக்கு மூத்த பிள்ளை. அவங்க அமுதாவோட அம்மாவை கல்யாணம் பன்னாரு. அதே நேரம் தான் வேலன் அப்பாவும், லக்ஷ்மி அம்மாவை கல்யாணம் பன்னாங்க. வேலன் அப்பா ஒரு லோயர். அம்மா பி.எஸ்.சி மெக்ஸ் படிச்சு இருக்காங்க. அவங்களுக்கு யாருக்கும் குழந்தை இருக்க இல்லை.

யேன்னா அவங்க எல்லோரும் லக்ஷ்மி அம்மாவோட தங்கை சகு அம்மாவை தான் தன்னோட குழந்தையாக பார்த்துகிட்டாங்க. அவங்களை படிக்க வச்சு சிடியோட கலேக்டர் ஆக்கினாங்க. வனஜா அத்தை கல்யாணம் பன்னி அவங்களுக்கு விநய் பிறந்தான். அவன் தான் எங்க வீட்டு முதல் வாரிசு. சகு அம்மா ஒருத்தரை காதலிக்கிறதா வீட்டில் சொல்லவும் அவரை பற்றி விசாரிக்க முன்னாடியே அவரே வீட்டிற்கு வந்து பேசி சம்மதத்தை வாங்கினாரு. அவரு ஒரு பிசினஸ் மேன். ஒரு நல்ல நாளில் அவருக்கும், சகு அம்மாவிற்கும் கல்யாணம் பன்னி வச்சாங்க.

கொஞ்ச நாட்களுக்கு பிறகு அவங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பசறந்தது. அவன் தான் நான். கொஞ்ச வருஷத்துக்கு அப்பொறமா லக்ஷ்மி அம்மாவுக்கு ஜானகி பிறந்தா. அவ தான் இந்த வீட்டோட முதல் பெண் வாரிசு. ரொம்ப நல்லா தான் இருந்தோம். எங்க அப்பாவுக்கு யாரும் இல்லை. அவருக்கு அம்மாவோட குடும்பம் தான் அவரோட குடும்பம். ஊருக்கு தேவையானதை எல்லாமே பார்த்து பார்த்து செஞ்சாரு. எல்லாருக்கு அவரு மேலே நல்ல மதிப்பு இருந்தது. அப்பா நம்ம வீட்டில் ரொம்ப ஸ்பெஷல், சகு அம்மாவை கல்யாணம் பன்னதால்.

லக்ஷ்மி அம்மாவும், சகு அம்மாவும் ஒரே நேரம் கர்பம் ஆனாங்க. அவங்க இரண்டுபேருக்கும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் பிரசவம் நடந்து சஞ்சு, அஞ்சு பொறந்தாங்க. வளர, வளர இரண்டு பேருமே ஒன்னா தான் இருக்க ஆரம்பிச்சாங்க. அவங்க ஊரப் பொறுத்தவரைக்கும் டிவின்ஸ். ரொம்ப சந்தோஷமா வாழ்க்கை போயிட்டு இருந்துச்சு. சகு அம்மா, அப்பா அவங்க எப்பவும் சஞ்சுவை அம்முன்னும், என்னை அம்புலுன்னும் தான் கூப்பிடுவாங்க.

எனக்கு 8 வயசு, சஞ்சுவுக்கு 3 வயசு, அப்போ ஒரு நாள் ஊருக்கு வரும் போது, அப்பாவுக்கு ஒரு கோல் வந்தது. அப்பா எப்போவும் கார் டிரைவ் பன்னும் போதும் கோல் வந்ததுன்னா ரோட்டில் சைட் பன்னி வண்டியை நிறுத்திருவாங்க. அதே போல தான் அன்றைக்கும் சைட் பன்னி நிறுத்த, சஞ்சு பஞ்சுமிட்டாயைப் பார்த்து அதை வாங்கி கேட்டு அடம் பிடிச்சா. அம்மா என்னை வாங்க அனுப்பும் போது, சஞ்சுவும் என் கூட வர அடம்பிடிக்க அவளை என் கூட அனுப்பினாங்க"

"அப்போ..." என்று சக்தி எழுந்து நின்றான்.

தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு கூற ஆரம்பித்தான்.

"நானும் அவளும் ரோட் குரொஸ் பன்னி அந்த பக்கம் போனதுக்கு அப்பொறம் ஏதோ பெரியதாக சத்தம் கேட்டு திரும்பினேன், அப்போ எங்க காரை முன்னால் ஒரு லொறியும், பின்னால் ஒரு லொறியும் இடிச்சி நசுக்கி இருந்திச்சி. அம்மா, அப்பா இரண்டு பேருமே ஸ்பொட் அவுட்" என்று அவன் அழ சஞ்சு அவனை ஓடி வந்து பின்னிருந்து அணைத்து அழுதாள்.

"ப்ளீஸ் சக்தி, நீ அழுதால் என்னால் தாங்க முடியாது" என்றாள்.

அவன் தன்  கண்ணீரைத் துடைத்துக் கொண்டு "நான் அழ மாட்டேன்" என்றான்.

பின் கூறத் தொடங்கினான்.

"நான் அதை பார்த்து அங்கேயே மயங்கி விழுந்துட்டேன். சஞ்சு அழுதுக் கொண்டே என்னை எழுப்பிருக்கா. நான் எழும்ப இல்லை. அங்கே இருந்த நம்ம ஊருகாரர் ஒருத்தர், வேலன் அப்பாவுக்கு போன் பன்னி விஷயத்தை சொன்னாங்க. நம்ம குடும்பம் பூராவும் வந்தது. அம்மா, அப்பாவை போஸ்மோடம் பன்னி அனுப்பினாங்க.

நான் மயக்கத்தில் இருந்த விழிச்சதுக்கு அப்பொறமா என் சஞ்சு கேட்ட முதல் கேள்வி, 'அம்மா அப்பா எங்க அண்ணா?' என்று தான் என்னால் பதில் சொல்ல தெரியல்லை. வேலன் அப்பா தான் அவளை சமாதானபடுத்தினாங்க. அதில் இருந்து இன்றைக்கு வரைக்கும் இவ என்னை அண்ணான்னு கூப்பிடுறது இல்லை. நம்ம காரை அக்சிடன்ட் பன்ன இருவரும் கைது செய்யப்பட்டாங்க. எங்களை ஊருக்கு கூட்டிட்டு வந்துட்டாங்க. வேலன் அப்பா  விசாரிக்கவும் தெரிய வந்தது "இட் இஸ் அ பிரி பிளேன் மர்டர்" ஆனால் அவரால எதுவும் பன்ன முடியல்ல.

"ஒரு வண்டியில் பிரேக் போனதாலவும், மற்றைய வண்டி டிரைவர் குடிச்சிட்டு வந்ததாலேயும் தான் அக்சிடன் ஆச்சுன்னு கேசை மூடிட்டாங்க. எங்க பெத்தவங்களை கொன்னவங்களால் எங்களுக்கும் ஆபத்து இருக்கும்னு தான் அமுதாவோட அப்பா என்னை மகனா ஏத்துக்க, சஞ்சுவை அஞ்சுவோட டிவின் சிஸ்டரா முழு உலகத்துக்கும் காட்டினாரு வேலன் அப்பா. அவரும் அதோட தன்னை லோயராக வெளிக்காட்டிக்க இல்லை. எல்லோரும் சென்னையை விட்டு ஒதுங்கி வாழ ஆரம்பிச்சோம்.

என்னால் என் பெத்தவங்களுக்கு நியாயம் கிடைக்கனும் தான் நான் பொலிஸ் ஆனேன். அந்த கேஸை நான், யாருக்கும் தெரியாமல் விசாரிக்கிறேன்" என்றான் சக்தி.

"உங்க அம்மாவோட பெயர் என்ன?" என்று ஆகாஷ் கேட்க,

"சகுந்தலா தேவி ஐ.ஏ.எஸ்"என்றான்.

"நான் அவங்களை பற்றி கேள்வி பட்டு இருக்கேன். என்னோட அம்மா சொல்லி இருக்காங்க. அவங்க ரொம்ப நல்லவங்களாம். தைரியமானவங்களாம். யாருக்கும் பயப்படாமல் எதையும் செய்வாங்க, பொண்ணுங்களுக்கு ரொம்ப பாதுகாப்ப அமைச்சு கொடுத்திருக்காங்க" என்றாள்  ரியா.

"அப்பா பெயர் என்ன?" என்று கேட்க

"தொழிலதிபர் பிரகாஷ் குமார்" என்றாள் சஞ்சு.

"உங்க இன்வெஸ்டிகேஷன் எந்த லெவலில் இருக்கு?" என்று சித்து கேட்க,

"இந்த சம்பவம் நடந்து 16 வருஷமாச்சு. நிறைய பேருக்கு ஞாபகம் இல்லை. ஆனால் அப்பா கிட்ட கடைசியாக பேசினவரை பார்த்தது ஒரே ஆள்  தான்" என்று சக்தி கூற

"யாரது?" என்று விகி கேட்க,

"சஞ்சனா"  என்றான் சக்தி.

யஷ்தவி