இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் nandhavanamforum@gmail.com என்ற மின்னஞ்சலுக்குத் தொடர்பு கொள்ளலாம்.

இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் nandhavanamforum@gmail.com என்ற மின்னஞ்சலுக்குத் தொடர்பு கொள்ளலாம்.

Register with us by filling out the form below.
You need to log in to create posts and topics.

நிலவு 50

ஏழு வீராங்கனைகளும் மைதானத்திற்கு இறங்கினர். அதில் நான்கு நண்பர்கள் மட்டும் கவினின் அருகில் பெயரை வழங்கச் சென்றனர்.

"என்ன இங்க இருக்கிங்க?" என்று கவின் கேட்க,

"எங்க பெயர்கள்" என்று கிறு கூற

"அதெல்லாம் எப்போவோ எழுதியாச்சு, இப்போ கிரௌவ்ன்டிற்கு போலாம்" என்று கவின் கூற

"எல்லாம் பிளேன் பன்னி பன்றது போல இருக்கு, பார்த்துக்குறேன்" என்று கிறு கூறி செல்லும் போது, நால்வரும் பேசிக் கொண்டே இருந்தனர்.

அதே நேரம் அங்கு ஹபீஸ், ஷ்ரவனும் வந்தனர்.

"நல்லா விளையாடுங்க டி" என்று கூற

"அதென்னடா பழையதை மறந்துட்ட, நம்ம சிக்னேசர் எக்ஷன் ஞாபகம் இருக்கா?" என்று சௌமி கேட்க,

"நான் எப்படி மறப்பேன்" என்று அவன் தன் வலது கையை நீட்ட

அவளும் தன் வலக் கையை நீட்டி முதலில் தங்கள் உள்ளங்கைகளை அடித்தனர். பின் பிற்பக்கத்தை அடித்தனர். அடுத்து பெருவிரலை மட்டும் நீட்டி மற்ற விரல்களை மடித்து முட்டிக் கொண்டனர்.

இதே போல் ஆறுபேரும் செய்தனர். பின் சிரித்து, செல்ல

"ஏய் முன்னாடி போல எங்க பி.பி ஐ எகிற வைக்காதிங்க டி" என்று ஹபீஸ் கூற

"அதை தான் பன்ன போறோம்" என்று கீது கண்ணடித்தாள்..

"இவளுங்க திருந்த மாட்டாளுங்க, முன்னாடி நம்மளோட பி.பி மட்டுமே கூட்டினாளுங்க, இப்போ மெச் பார்க்குற எல்லாரோட பி.பி ஐயும் கூட்ட போறாளுங்க. சரி வா போலாம்" என்று ஷ்ரவன் கூறி தமக்கு ஒதுகப்பட்ட இடத்திற்கு சென்றனர்.

மெச் ஆரம்பிக்க பத்து நிமிடங்கள் இருக்க, வார்ம் அப் செய்தனர்.

"ரொம்ப வருஷத்துக்கு அப்பொறமா விளையாட போறோம் டி, நினைச்சலே புல்லரிக்குது" என்று கீது கூற

"ஆமா, பட் ரொம்ப ஆர்வமா இருக்கு" என்றாள் சௌமி.

"என்ன ஏ.கே அமைதியா இருக்க?" என்று ஜெசி கேட்க,

"என்னால் நீங்க யாருமே விளையாட இல்லை அதான்" என்று கிறு கூற

"அட லூசே இதற்கு தான் இப்படி இருக்கியா? எனக்கு இதான் பிடிச்சிருக்கு" என்று கீது கூற மற்றவர்களும் அதை ஆமோதித்தனர்.

குமார் : இன்னும் ஐந்து நிமிடத்தில் நாம எல்லோருமே எதிர்பார்த்த பைனல் மெச் ஆரம்பிக்க போகுது.

காவ்யா : ஒரு அணியில் சின்ன திருத்தம் நடந்து குமார், AGC பம்பனி சார்பாக கிறுஸ்திகா, ஜெசீரா, கீதா, சௌமியா அப்படின்னு நான்கு புதிய வீராங்கனைகள் விளையாட போறாங்க, இப்போ என்ன நடக்க போகுதுன்னு நமக்கு தெரியல்ல, யேன்னா இவளோ நேரமாக விளையாடிய  பிளேயர்சிற்கு அனுபவம் இருக்கு. இவங்க பைனல் மெச்சை தான் முதல் மெச்சாக விளையாட போறாங்க

குமார் : ஆமா காவ்யா, இப்போ அதிகமானவங்க  NGC அணிக்கு வெற்று பெறுகிற வாய்ப்பு அதிகமா இருக்குன்னு சொல்றாங்க. எந்த அணி வெற்றியை தழுவிச் செல்ல இருக்கின்றது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

காவ்யா : இன்னும் ஒரு விஷயம் இது பைனல் மெச், அதனால் ஒரு பிரேக் தான் இருக்கு. அதுவும் ஐந்து நிமிஷம்

குமார் : இரண்டு அணியோட வீராங்கனைகளும் கோர்டுக்குள்ள போயிட்டாங்க. இப்போ இரு அணி வீராங்கனைகளும் கைகுழுகிக் கொள்கிறார்கள்.

காவ்யா : ஆமா குமார், இப்போ அவங்க பிளேசுக்கு போய் நின்றுடாங்க. இதுல என்ன வித்தியாசமா இருக்குன்னா, AGC ஓட C player NGC ஓட C player அ விட உயரம் கம்மியா இருக்காங்க. அதனால டொஸ்அப் ல இவங்க வின் பன்றதுக்கான ஷான்சஸ் குறைவு.

குமார் : டொஸ்அப், ஆமா இப்போ பந்தை பிடிச்சது NGC ஓட C player தான்.

காவ்யா : இப்போ சென்டர் பாஸ் வாவ் NGC ஓட WA போலை பிடிச்சிட்டாங்க. Passes WA to GA to C to GS க்கு போல் போயிருச்சு.

குமார் : வாவ் ஒரு கோல் எடுத்துட்டாங்க. ஆனால் AGC ஓட WA, WD, C, GA  யாரும் சுவாரசியமா விளையாடுறாங்க இல்லை. இப்படியே போச்சுன்னா நிச்சயமா NGC தான் championship அ எடுப்பாங்க.

காவ்யா : ஆமா குமார், நானும் அப்படி நினைக்குறேன். இப்போ AGC ஓட C க்கு சென்டர் பாஸ் WD எடுக்குறாங்க, WD to WA to C to GA to GS  போயிருச்சு சூட் பன்னுவாங்களா இல்லையான்னு பார்க்கலாம்

குமார் : சூப்பர் சூட் பன்னி ஒரு பொய்ன்ட் எடுத்து கொடுத்து இருக்காங்க.

காவ்யா : இப்போ இரண்டு அணியும் ஒரே புள்ளிகளை தான் எடுத்து இருக்காங்க.

குமார் : competition டப்பா போகுது, இப்போ NGC ஓட சென்டரிடம் போல் இருக்கு, யாருமே free ஆகுறது போல தோனல்ல அவங்களுக்கு மூன்று நிமிஷம் தான் டைம் இப்போ, ஒன்றரை நிமிஷம் முடிந்து விட்டது.

காவ்யா : அவங்க தன்னோட அணி WA நோக்கி பந்தை வீசுறாங்க வாவ் செம்மையா AGC ஓட சென்டர் பந்தை பிடிச்சிட்டாங்க.

குமார் : சூப்பரா விளையாடுறாங்க. ஓஓ நோ, ரெப்ரி ஸ்டெபிங்னு சொல்லிட்டாங்க அதனால திரும்பவும் NGC ஓட சென்டரிடம் பந்து வழங்கப்படுகிறது.

காவ்யா : வாவ் வாவ் வாவ் சூப்பரா பாஸ்ல சூட் பன்னி  NGC அணிக்கு ஒரு புள்ளி கிடைக்குது.

குமார் : இப்போ NGC : AGC  2:1 என்ற நிலையில் இருக்கு. இப்போ AGC ஓட சென்டரிடம் போல் வழங்கப்பட்டு சென்டர் பாஸ் பன்ன போறாங்க, பந்தை WA வழங்கும் போது  NGC ஓட WD பாய்ந்து பிடிச்சிட்டாங்க. WD to C to GA to GS இப்போ சூட் பன்னிட்டாங்க.

காவ்யா : இப்போ ஸ்கோர் NGC : AGC  3:1, மீண்டும் பந்து மாற்றப்பட்டு அப்புள்ளியும் NGC அணிக்கே சென்றது. பின் ஐந்து நிமிட இடைவேளை வழங்கப்பட்டது.

மற்ற மூன்று வீராங்கனைகளும் இவர்கள் நால்வருக்கும் திட்டிக் கொண்டு வந்தனர்.

அதே நேரம் கிறுவைத் தேடி வருகை தந்தாள் நிகாரிகா,

"என் காலில் விழ தயாராயிரு" என்று கூறிச் செல்ல கிறு அவளைப் பார்த்து நக்கலாகப் புன்னகைத்தாள்.

ஷ்ரவனும், ஹபீசும் சிரித்துப் பேச அதில் வினோ காண்டாகி அங்கே வந்தான்.

"டேய் உங்க பிரன்சுங்க இவளோ கேவலமா ஆடுறாளுங்க, நாம வின் பன்னுவோமா இல்லையான்னு பயந்துட்டு இருக்கோம். நீங்க சிரிச்சுட்டு இருக்கிங்க" என்று கத்த

அனைவரும் அவ்விடத்திற்கு வந்தனர்.

"நீங்க யாரும் பயப்டாதிங்க, வின் பன்றது உங்க கம்பனி தான்" என்றான் ஷ்ரவன்.

"கொஞ்சமாவது யோசி ஷ்ரவன் ஸ்கோர் 1:4 அவங்க எப்படி வின் பன்னுவாளுங்க?" என்று அஸ்வின் கேட்க,

"அவளுங்களுக்கு அடுத்தவங்க பி.பி ஐ எகிற வைக்குறதுல அம்புட்டு பிரியம், இப்போ உங்க எல்லோரையும் டென்ஷன் பன்னி இருக்காளுங்க. இவங்க மூன்று கோல் அதிகமா எடுத்து எப்படி  வின் பன்றாங்கன்னு மட்டும் பாருங்க" என்றான் ஹபீஸ்.

மற்றை மூன்று பேரும் கோர்ச்சிடம் சண்டை பிடித்துக் கொண்டு இருந்தனர். அங்கே நால்வரும் சிரித்து வந்தனர்.

"என்ன மேம் நாங்கள் டென்ஷனா இருக்கோம், இவங்க சிரிக்கிறாங்க?" என்று ஒருவள் கத்த

"இதற்கு தான் முன்ன பின்ன நெட் போல் விளையாடினவங்களை தெரிவு செய்யனுமனு சொல்றது" என்று இன்னொருவள் கத்த

"ஜஸ்ட் ஷட் அப்" என்று கோர்ச் கத்தினார்.

"இவங்க நாலு பேரும் யாரு தெரியுமா?, ஸ்டேட் லெவல் விளையாடமல் இன்டர்நெஷனல் நெட்போல் டீமிற்கு சிலெக்ட் ஆன பிளேயர்ஸ், இவ ஏ.கே, அவ கீது, ஜெசி, சௌமி கேள்விபட்டு இருப்பிங்களே" என்று கேட்க,

அவர்கள் 'ஆம்' என்று தலையாட்டினர்.

"இங்க பாருங்க, நாங்க தான் மெச் வின் பன்னுவோம் அதில் எந்த மாற்றமும் இல்லை" என்றாள் கீது.

"நாங்கள் ஆரம்பத்துலேயே  நல்லா விளையாடினால் எதிர் டீம் உஷாராகிருவாங்க, நம்ம ஸ்ட்ரென்த்துக்கு அவங்களும் விளையாட ஆரம்பிப்பாங்க. இப்போ நம்ம ஸ்கோரை பார்த்துட்டு எங்களை ஈசியா வின் பன்னலாம் அப்படிங்குற மென்டலிடியோட தான் கோர்டுகுள்ள வருவாங்க. நாம இப்போ வெறித்தனமா விளையாட ஆரம்பிச்சா அவங்க மென்டலிடியோட ஸ்ட்ரோங் குறைஞ்சிரும். விளையாடும் போது தடுமாறுவாங்க. எப்பவும் ஒரு பிளேயருக்கு நிதானம், விவேகம் ரொம்ப முக்கியம், அதை இழந்துட்டால் நம்ம தோத்து போயிருவோம்" என்றாள் சௌமி.

"இப்போ எங்க டேர்ன், நாங்க விளையாடும் போது போல் உங்க இரண்டு பேருக்கும் வராது. GS ற்கும் எங்களுக்கும் மட்டுமே போல் வரும்.   எங்க நான்கு பேர்கிட்ட தான் இருக்கும். நீங்க என்ன பன்னும்னா உங்க பார்ட்னர்ஸை free ஆக விட கூடாது. அவ கூடவே இருக்கனும் ஓ.கே வா?" என்று ஜெசி கேட்க,

அவர்களும் சரி என்றனர்.

"நம்ம டார்கட் 7 இப்போ நம்ம ஆட்டத்தை ஆரம்பிக்கலாமா?" என்று கிறு கேட்க நால்வரும் அணைத்துக் கொண்டனர். அடுத்து அவர்களுடைய சிக்னேசர் எக்ஷனை செய்து நெட்போல் கோர்டிற்குள் சென்றனர்.

டொஸ்அப் செய்யப்பட்டது.

குமார் : வாவ் பென்டாஸ்டிக், AGC ஓட சென்டர் பிளேயர் சூப்பரா பாய்ந்து போலை பிடிச்சு டொஸ்ஸை வின் பன்னிட்டாங்க. இதை நான் எதிர்பார்க்கவே இல்லை.

காவ்யா : இப்போ சென்டர் பாஸ், ஏஏ சான்ஸ்லஸ் மூன்று செக்கனுக்கு முன்னாடியே பந்தை வீசி C to WA to GA to GS போய் சூட் பன்னி ஒரு பொயின்ட் எடுத்துட்டாங்க

குமார் : ஆமா காவ்யா, இது வரைக்கும் யாருமே three passes goal போட இல்லை. இன்றைய நாளில் இது தான் special,

காவ்யா : இப்போ NGC ஓட சென்டருக்கு போல் போயிருச்சு அவங்க  WA ஐ நோக்கி வீசுறாங்க. ஓ மை கோட், பெபியூலஸ் AGC ஓட WD அதை பிடிச்சு C கொடுத்து C to WA toGA to GS கொடுத்து இன்னொரு பொய்ன்ஸ் எடுத்துட்டாங்க. என்ன ஒரு வேகம்

குமார் : கடுகு சிரிதானாலும் காரம் பெரிதுன்னு சொல்லுவாங்க. அதற்கு உதாரணம் AGC ஓட சென்டர் பிளேயர், புகுந்து விளையாடுறாங்க, இந்த நான்கு பிளேயர்சையும் இவளோ நேரமா எங்க பா ஒளிச்சு வச்சிருந்திங்க?

காவ்யா : சூப்பரா விளையாடுறாங்க, இப்போ AGC ஓட செனடர் கிட்ட போல் போயிருச்சு வாவ் வாவ் வாவ்  செம்ம  again three passes ல இன்னொரு பொயின்ட் எடுத்து இரு அணிகளும் ஒரே புள்ளியை எடுத்து இருக்காங்க.

குமார் : இப்போ தான் ஆட்டம் சூடு பிடிச்சு இருக்கு, பார்க்கலாம் என்ன நடக்க போகுதுன்னு?

காவ்யா : எந்த அணி வெற்றி பெற போகுதுன்னு பார்க்க நாங்களும் ஆர்வமா இருக்கு.

குமார் : NGC ஓட C இடமே போல் இருக்கு அதை வீசுறாங்க, சூப்பர் மா நீ வேற லெவல், யாருக்கு வீச போறாங்கன்னு கண்டு பிடிச்சு AGC ஓட C போலை பாய்ந்து பிடிச்சு three passes ல இன்னொரு பொயின்டை எடுத்துட்டாங்க.

காவ்யா : குமார் நீ கவனிச்சியா? AGC அணி தன்னோட பார்ட்னர்சை free ஆகவே விடமாட்டேங்குறாங்க. அவங்க சென்டர் குள்ளமா இருக்கிறாதால இடையில புகுந்து ஓடுறது அவங்களுக்கு இலகுவா இருக்கு, இவங்க நான்கு பேருமே அனுபவம் இருக்கிறவங்க போல் விளையாடுறாங்க.

குமார் : ஆமா சூப்பரா நுணுக்கங்களோட விளையாடுறாங்க, பார்க்கலாம் என்ன நடக்க போகுதுன்னு பென்டாஸ்டிக், நாம கதைக்கு நேரத்துல கூட இன்னொரு பொயின்டை எடுத்துட்டாங்க AGC அணி.

காவ்யா : இந்த அளவு வேகமும், விவேகமும் இருக்குன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை

குமார் : ஆமா இப்போ AGC ஓட சென்டர் பாஸ், வாவ் மாஸ் கோல், three passes ல another goal இப்போ ஸ்கோர் NGC : AGC 4: 7 எடுத்து இருக்காங்க

காவ்யா : சூப்பரோ சூப்பர் ரெப்ரி AGC அணி வெற்றி பெற்றுக கொண்டாங்க என்பதை அறிவிச்சுட்டாங்க.

குமார் : வாழ்த்துக்கள் AGC team என்ற அறிவிப்போடு மெச் நிறைவடைந்தது.

யஷ்தவி

   அருமை