இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் nandhavanamforum@gmail.com என்ற மின்னஞ்சலுக்குத் தொடர்பு கொள்ளலாம்.

இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் nandhavanamforum@gmail.com என்ற மின்னஞ்சலுக்குத் தொடர்பு கொள்ளலாம்.

Register with us by filling out the form below.
You need to log in to create posts and topics.

விழிகள் பேசுதே - 11

தூரத்தில் தோன்றிடும் மேகத்தை போலவே
நான் உனை பார்க்கிறேன் அன்பே
சாரலாய் ஓர் முறை நீ என்னை தீண்டினாய்
உனக்கது தெரிந்ததா அன்பே
என் மனம் கானலின் நீர் என ஆகுமா
கைகளில் சேருமா அன்பே

காலையிலேயே தன்னவன் தரிசனம் கிட்டியதால் வகுப்பறையில் வானத்தில் பறந்து கொண்டு  இருந்தாள் மேஹா.....

"டிடி போதும் டி.....ஓவரா மேலே போகாத....லேண்டிங் ஹெவி டேஞ்சர் ஆகிடும் பாத்துக்கோ..."என ஆனு கலாய்க்க( ஆனந்தி....ஆனு என்றே நம்மளும் கூப்பிடுவோம்😝😝)

"ச்ச்ச....போ....அவர் எவ்ளோ அழகுல....என் கண்ணே பட்டுடும் போல.... "

"அப்போ அவரை பார்க்காத டி...."ஆனு கூற

"போடி...நான் பார்ப்பேன்".....அவள் மறுபடியும் கன்னத்தில் கை வைத்து கொண்டு மேலே பார்க்க ஆரம்பித்துவிட்டாள்.....

அய்யோ என தலையில் அடித்துக் கொண்டு இவ பக்கத்துல உட்கார்ந்தா எனக்கு பைத்தியம் பிடிச்சுரும் என ஆனு எழுந்துக் கொள்ள....

"ஆமா ஆமா என் பக்கத்துல உட்கார்ந்தா பைத்தியம் பிடிக்கும்....மேடம்க்கு வேணா ஒபாமா பக்கத்துல ஒரு சீட் போட சொல்லட்டுமா "மேஹா கிண்டலடிக்க....

"போடி...."எனக் கூறிய ஆனு எங்கே சென்று அமர்வது என தேடிக் கொண்டிருந்தாள்...

"நீ இங்கேயே இரு படிப்ஸ்😂....அப்போ தான் உனக்கு நோட்ஸ் எடுக்க கரெக்ட்டா இருக்கும்......நான் என் மச்சிக்கிட்ட போறேன்"எனக் கூறிவிட்டு மேஹா கடைசி பென்ச்சிற்கு சென்று விட்டாள்....

"ஹாய் டி மச்சி.... ஏமி சேஸ்தாவு..."

"ஆன் ...."அவள் திருத்திருவென விழிக்க...

ஈஈஈஈ என்று விழித்தவள் "எலா உன்னாவு"எனக் கேட்க...

"அய்யோ மச்சி....புரியுற மாதிரியே பேச மாட்டியா??"என ஹரினி கேட்க

ஹா ஹா.....ஹரினியிடம் மட்டுமே இப்படி விளையாடுவாள்....அதில் மேஹாவுக்கு அளவற்ற மகிழ்ச்சி....

"அய்யோ மச்சி என்ன பண்ணுர?? எப்படி இருக்கணு கேக்குறேன்"

"இப்படி கேட்ட மாதிரியே பர்ஸ்ட் கேக்குறக்கு என்ன மேடம்"ஹரினி மேஹாவின் காதைப் பிடித்து திருக....

"அய்யோ வலிக்குது...."மேஹா சிரித்துக் கொண்டே கூற....

அவள் காதை விடுவித்தவள் "உன்னெல்லாம்.....காதைப் பிடிச்சு திருகுற...அப்பவும் ஈஈஈனு பல்ல காமி...சரி என்ன பண்ண அவளை?? இங்கே தொரத்தி விட்டுட்டாளா??"

"அய்யோடா...அவ ஒன்னும் என்ன தொரத்தல....நான் தான் என் ஹரினி பேபிய பார்க்க வந்தேன்"மேஹா ஹரினி தோள் மீது சாய்ந்தாள்....

"ஹா ஹா..."எனச் சிரித்தவள்.....
"ஏண்டி மனோ சார் மனோ சார்னு பைத்தியம் மாதிரி சுத்துற..."

தோள் மீது உள்ள தலையை லேசாக சாய்த்து"ஆமா மச்சி...மனோ சார் பைத்தியம் பிடிச்சுருச்சு எனக்கு..."ஹரினியைப் பார்த்து கண்ணடித்தாள்...

"லூசு...."அவள் தலையில் வலிக்காதவாறு கொட்டியவள்
"அவரை எப்போ பார்த்தனு நீ சொல்லவே இல்லை....சொல்லுடி"

"ஆமா மச்சி...நான் யார்கிட்டேயும் சொன்னதில்ல....உன்கிட்ட சொல்றேன்...நீ யார்கிட்டேயும் சொல்ல கூடாது சரியா??"மேஹா ஹரினியிடம் கேட்க

அவளும் சரி என்று தலையசைத்தாள்...
(ஸ்ஸ்....நீங்களும் சொல்லாதீங்க😝)
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
நான் காலேஜ்க்கு  அட்மிஷன் போட இங்கே வந்தேன்....

முன்னாடி என்ட்ரன்ஸ் செமையா இருந்துச்சு....ஆஆஆஆ னு வாய தொறந்து பாத்துட்டே வந்தேன்....

காலேஜ்ல ஏதோ பங்சன் போல....பசங்க எல்லாரும் வேஷ்டி,பொண்ணுங்க எல்லாரும் சேலை கட்டிருந்தாங்க....

நான் உள்ளே வரப்போ இரண்டு ஜோடிங்க பைக்ல போனாங்க.....

"நம்ம வாழ்க்கைலையும் இப்படி ஒன்னு நடக்குமா??இல்ல நடக்கும்னு நமக்கு நாமே ஏமாத்திக்கிட்டு இருக்கோமா??"நினைச்சுட்டே வந்தேன்.....

அங்கே ஒரு ஜோடி செல்பி எடுத்துட்டு இருந்தாங்க....

"நானும் காலேஜ் போவேன்...லவ் பண்ணுவேன்...இப்படி செல்பி எடுப்பேன்"எனக்கு நானே சொல்லிக்கிட்டு சிரிச்சுட்டு வந்தேன்...

"வாய்ப்பு இல்ல ராஜா வாய்ப்பே இல்லை..."அப்படினு ஒரு சவுண்ட்....

செம கோவம்...நான் நினைச்சதுக்கு யாரோ கமெண்ட் பண்ணிருக்காங்கனு கோவத்தோட திட்ட திரும்புனேன்....

கருப்பு சட்டை,வெள்ளை வேஷ்டி....லைட்டா நெத்தில சந்தனம்.....அந்த நல்லா இருக்க முடிய சும்மா சும்மா சரி பண்ணிக்கிட்டே இருந்தாங்க....

"ஹைலைட் என்னன்னா.....அவங்கள திட்ட திரும்புன நான் ஆஆஆஆ னு வாயப் பொளந்து சைட் அடிச்சுட்டு இருந்தேன்...."

அப்புறம் ஆடிட்டோரியம் வர சொன்னாங்கனு எல்லாரும் போக ஆரம்பிச்சுட்டாங்க....என்னையே அறியாம நானும் பின்னாடியே போனேன்...

அங்க மைக்ல "இப்போ ஒரு கேம் விளையாட போறோம்....எல்லாரும் கண்ண மூடிக்கிட்டு நடக்க ஆரம்பிங்க....உங்க மேல வந்து யாராவது மோதுனா அவங்க கை பிடிச்சுட்டு நில்லுங்க....அப்புறம் நான் சொல்லும் போது கண்ணுல இருக்க கட்டை கழட்டணும்...உங்க முன்னாடி யாரு இருக்காங்களோ அவங்க உங்க லைப்ல ஸ்பெஷல் பர்சன்னு சொன்னாங்க...."

நானும் கண்ண சும்மா மூடிக்கிட்டேன்....
யாரோ என் கையைப் பிடிச்சாங்க.....

கண்ணை மெதுவா திறந்து பார்த்தேன்...அப்படியே நின்னுட்டே இருந்தேன்...ஏன்னா என் முன்னாடி மனோ சார்...

அவர் கையை பிடிச்சுட்டே இருக்கணும் போல இருந்துச்சு....
ஆனால் அப்பா என்ன கூப்பிட்டுட்டு போயிட்டாரு....

அவர் கையை நான் விட்டதும் அவர் என் கையை தேடுனாரு....எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு....அவரை திரும்பி திரும்பி பார்த்துட்டே போனேன்....

அட்மிஷன் போட்டுட்டு அப்பா கூட்டிட்டு போயிட்டாரு.....

காலேஜ் வந்து ஜாய்ன் பண்ணதும் அவரைத் தான் தேடுனேன்....

சீனியரா இருக்கும்னு ஒவ்வொரு டிபார்ட்மெண்ட் முன்னாடியும் நிப்பேன்...பைக் ஸ்டாண்ட்,கேண்டீன்,லைப்ரரினு எல்லா இடத்துலயும் அவர பார்க்க மாட்டமானு தேடுனேன்....

அப்புறம் நம்ம செகண்ட் இயர் வந்துட்டோம்....முகில் சார் கிளாஸ்...செம மொக்கையா இருக்கும்...ஆனாலும் முகி சார்ர
பிடிக்கும்னு கிளாஸ் அட்டெண்ட் பண்ணுவேன்....

ஒருநாள் இந்த உமா மேம் வந்து முகி சார் வரல இன்னைக்கு வேற சார் தான் வருவாங்கனு சொன்னாங்க....

எனக்கு அந்த சப்ஜெக்ட் பிடிக்காது......முகி சாருக்காக கிளாஸ் அட்டெண்ட் பண்ணுவேன்...அவரு வரலைனு சொன்னதும் கட் அடிச்சர்லாம்னு நானும் ஆனுவும் கட் அடிச்சிட்டோம்.......

நாங்க கிளாஸ் முடிஞ்சதும் ஜாலியா உள்ள என்டர் ஆனோம்....கிளாஸ்ஸே செமையா இருக்காருலனு பேசிட்டு இருந்தாங்க....

யாரு டினு கேட்டேன்....

இப்போ வந்த சார் தான்...அப்பப்பா...செம னு சொல்லிட்டு இருந்தாங்க...

"அறிவில்லையா டி உங்களுக்கு...அவருக்கு நமக்கு சார்...அவரை போய் இப்படி சொல்லிட்டு இருக்கீங்க..."திட்டிட்டு என் இடத்துக்கு போயிட்டேன்....

அடுத்த நாள் அம்மா கிட்ட திட்டுவாங்கிட்டு தான் காலேஜ் வந்தேன்....சுத்தமா பிடிக்கல....கிளாஸ் அட்டெண்ட் பண்ண வேணாம்னு நினைச்சேன்...கிளம்பிரலாம்னு எழுந்திருக்கும் போது தான் அவரு உள்ளே வந்தாரு.....

"ஹாய் பிரண்ட்ஸ்....குட் மார்னிங்"சொல்லிட்டு சிரிச்சாரு....

"ஸப்பா...என்னடா இவரு இம்புட்டு அழகா இருக்காரு..."எனக்கு முன்னாடி சீட்டுல இருக்க ஒரு பொண்ணு சொன்னா.....

நறுக்குனு ஒரு கொட்டு வெச்சேன் அவ தலைல....

அவ பாவமா "ஏண்டி என்னே கொட்டுனனு கேட்டா"

"கண்ணை மூடுடி...அவர பார்த்த..கண்ணை நோண்டிடுவேன்.."அவள மிரட்டிட்டு கிளாஸ் கேர்ள்ஸ்ஸ பார்த்தா எல்லா பக்கிங்களும் அவரைத் தான்டி பாத்துட்டு இருக்காங்க.....

தலைவலி அதிகம் ஆயிடுச்சு....அப்படியே தலைல கை வெச்சுட்டு உட்காந்துட்டேன்...

அவரு கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சதும் தலைவலி பறந்து போன மாதிரி பீல்....

அவ்ளோ சூப்பரா எடுத்தாரு...அவரோட கண்ணு இருக்கே....அதுவே பேசுது....
அவரையே பாத்துட்டு இருந்தேன்....

டக்குனு கிளாஸ் முடிஞ்சுருச்சு....அவர் கிளம்பி போயிட்டாரு....

அப்போதான் என் மரமண்டைக்கு உரைச்சுது....அய்யோ நாம இவ்ளோ நாள் தேடுனது ஒரு பிரொஃபசரையானு.......

"பரவால....அவரு நேம் தெரிஞ்சிக்கலானு கேட்டா....எல்லாரும் கேவலமா ஒரு லுக் விடுறாங்க...."

ஈஈஈஈஈ னு இளிச்சுட்டே....டெஸ்க்ல படுத்துட்டேன்...

"ரொம்ப ரொம்ப ஹேப்பியா இருந்துச்சு...."

💗💗💗💗💗💗💗💗💗💗💗

அதுக்கப்புறம் தான் உனக்குத் தெரியுமே....அவர் நேம் தெரிஞ்சுக்க நான் பண்ணது எல்லாம் மேஹா சிரிக்க.....

"ஆமாமா..."ஹரினியும் சிரித்தாள்...

Uploaded files:
  • IMG-20200522-WA0002WHITE.jpg